11/30/2011

செங்கொடியூர் என பெயரிட்டு காஞ்சிபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்


தமிழ்நாடு காஞ்சிபுரத்தின் செங்கொடியூரில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் எழுச்சியோடு இடம்பெற்றது.
முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
.
நேற்று முந்தினம் (27-11-2011) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ் உனர்வாளரும், தமிழீழ ஆதரவாளருமான திரு. கொளத்தூர் மணி, தோழர்.தியாகு, மற்றும் அற்புதம் அம்மாள், திருச்சி செளந்தராசன், சி.மகேந்திரன், வேல்முருகன், பேராசிரியர் சரசுவதி, பார்வேந்தன், கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி, மல்லை சத்யா, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட  பல தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
.
கடந்த காலங்களில் இல்லாதவாறு பேரெழுச்சியோடு இடம்பெற்ற இம் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழகத்தின் பலபாகங்களிலும் இருந்து  பல்லாயிரக்கணக்காண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
.
குறிப்பாக பெருமளவான இளைஞர்களும், யுவதிகளும் உணர்வெழுச்சியோடு நிகழ்வில் கலந்துகொண்ட்அதோடு பெரும்பாலான நிகழ்வுகள் இளையோரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்கமுடிந்தது.
.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவும், அதன் பின்னரான மாவீரர் துயிலுமில்ல அழிப்புக்களும், தமிழர் வரலாற்று வாழ்வாதார சின்னங்கள் சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டும் வரும் நிலை கண்டு கொதித்தெழுந்து தமிழினமாய் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்கள் உணவெழுச்சியோடு போராட்டங்களையும் எழுச்சி நிகழ்வுகளையும், வீரவணக்க நிகழ்வுகளையும் நடாத்திவருவதும் அவை  அதிகரித்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக