வெலிக்கந்தை தடுப்பு முகாம் உட்பட புனர்வாழ்வு முகாம்களில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் 72 பேர் இன்று ஞாயிறு காலை மட்டக்களப்பில் வைத்து தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறீ கஜதீர முன்னிலையில் மட்டக்களப்பு மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சரும், விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியுமான கருணா என அழைக்கப்படும் முரளீதரன், மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, உட்பட அரசியல்வாதிகள், சமய தலைவர்கள், படை உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
72 முன்னாள் போராளிகளில் ஆண், பெண், இருபாலாரும் அடங்கியிருந்தனர். விடுதலை செய்யப்பட்ட பெண் போராளிகளில் பலர் 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுமிகளாக இருந்த வேளையில் வீடுகளில் புகுந்து கருணா தலைமையிலான விடுதலைப்புலிகள் இழுத்து சென்று புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர்.
இவ்வாறு வீட்டுக்கு ஒருவர் என இழுத்துச்செல்லப்பட்டவர்களில் இன்று விடுதலையான முனைக்காட்டைச்சேர்ந்த பெண் போராளி ஒருவரும் இருந்தார். அவரிடம் உங்கள் விடுதலை பற்றி என்ன மன உணர்வில் இருக்கிறீர்கள் என எமது செய்தியாளர் கேட்ட போது நான் படித்துக்கொண்டிருந்த போது 14வயதில் என்னை இயக்கம் பிடித்து சென்றது. எனது விருப்பம் இன்றி சேர்க்கப்பட்ட நான் கட்டாய பயிற்சி வழங்கப்பட்டேன். அதன் பின்னர் வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் சிக்கி பின்னர் இரண்டரை வருடங்கள் சித்திரவதைகளை அனுபவித்து இன்று விடுதலையாகியிருக்கிறேன்.
எங்களுடைய வாழ்க்கையை அழித்த கருணா இன்று இராஜபோக வாழ்க்கை வாழ்கிறார். அமைச்சராக இருக்கிறார். அவரால் கட்டாய பயிற்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாம் தண்டனை அனுபவித்து வாழ்க்கையை இழந்து நிற்கிறோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக