நீ செய்த குற்றம் ஒன்றுதான்
காவலர்களின் சப்பாத்துக் கால்களை
நக்க மறுத்த உன் நெஞ்சில்
நூறாயிரம் முறை
ஓங்கி …ஓங்கி மிதித்தன
ஆதிக்கக் கால்கள்
உன் உடல் பிழிந்து
உயிரைத் தோண்டி எடுத்துத்
தெருவில் எறிந்தனர் அவர்கள்
காவலர்களின் சப்பாத்துக் கால்களை
நக்க மறுத்த உன் நெஞ்சில்
நூறாயிரம் முறை
ஓங்கி …ஓங்கி மிதித்தன
ஆதிக்கக் கால்கள்
உன் உடல் பிழிந்து
உயிரைத் தோண்டி எடுத்துத்
தெருவில் எறிந்தனர் அவர்கள்
நேற்று நீ இட்ட கூக்குரலில்
வளைந்த சிறைக் கம்பிகளின்
நிழல் விழுந்த நிலத்தில்
உறைந்து கிடக்கிறது உன் குருதி
சிறையின் இருளின் முடக்குகளில்
எங்கோ
அப்பிக் கிடக்கிறது
உன் உயிர்
வளைந்த சிறைக் கம்பிகளின்
நிழல் விழுந்த நிலத்தில்
உறைந்து கிடக்கிறது உன் குருதி
சிறையின் இருளின் முடக்குகளில்
எங்கோ
அப்பிக் கிடக்கிறது
உன் உயிர்
இருள் வடிந்து விடிகின்ற ஓர் பொழுதில்
உயிர் மடிந்து வீழ்ந்தாய் என் நண்பனே
மரணித்தாய் என் தோழனே நீ மரணித்தாய்
உயிர் மடிந்து வீழ்ந்தாய் என் நண்பனே
மரணித்தாய் என் தோழனே நீ மரணித்தாய்
அனுராதபுரத்தில்;
உன் உடனிருந்த நண்பனை சித்திரவதை செய்ததும்,
மனிதக் கழிவூற்றி மண்டியிடச் சொன்னதும்- உன்
காதை அடைந்ததும் கனன்றேழுந்தாய் – தோழருடன்
காவலர் மூவரைச் சிறைப் பிடித்தாய்
சிறையிலிருந்து கொண்டு
சிறை மீட்கப் போரிட்டாய்
ஆயிரம் சிலுவைகளை நீ சுமந்து கொண்டு
அவனை அறைந்து வைத்த
ஆணியை பிடுங்கக் கரங் கொடுத்தாய்
உன் உடனிருந்த நண்பனை சித்திரவதை செய்ததும்,
மனிதக் கழிவூற்றி மண்டியிடச் சொன்னதும்- உன்
காதை அடைந்ததும் கனன்றேழுந்தாய் – தோழருடன்
காவலர் மூவரைச் சிறைப் பிடித்தாய்
சிறையிலிருந்து கொண்டு
சிறை மீட்கப் போரிட்டாய்
ஆயிரம் சிலுவைகளை நீ சுமந்து கொண்டு
அவனை அறைந்து வைத்த
ஆணியை பிடுங்கக் கரங் கொடுத்தாய்
என் போராளித் தோழனே!
மூன்றாண்டு கால அமைதிக்குப் பின்னால்
அதிகாரத்தின் முகங்களை நோக்கிச்
சுட்டுவிரல் நீட்டிய வீரனே!
மயங்கிக் கிடந்த உன்னைப்
படுகொலை செய்தனர் வீரர்கள்
பிணத்தைத் தூக்கித்
தூக்கில் போட்டு கொக்கரித்தனர் அவர்கள்
தோழனே நீ மரணித்தாய்
மூன்றாண்டு கால அமைதிக்குப் பின்னால்
அதிகாரத்தின் முகங்களை நோக்கிச்
சுட்டுவிரல் நீட்டிய வீரனே!
மயங்கிக் கிடந்த உன்னைப்
படுகொலை செய்தனர் வீரர்கள்
பிணத்தைத் தூக்கித்
தூக்கில் போட்டு கொக்கரித்தனர் அவர்கள்
தோழனே நீ மரணித்தாய்
உன் காயங்களைத் தொட்டுத் தடவி,
முத்தமிட்டு, பெரு மூச்செறிந்து
குருதி படிந்த உன் கேசம் கோதி
ஐயோ மகனே என்று ஆர்பரித்து
அழுது தேற உன் அம்மாவுக்கும்
அனுமதி மறுக்கப்பட்டதடா
முத்தமிட்டு, பெரு மூச்செறிந்து
குருதி படிந்த உன் கேசம் கோதி
ஐயோ மகனே என்று ஆர்பரித்து
அழுது தேற உன் அம்மாவுக்கும்
அனுமதி மறுக்கப்பட்டதடா
சுண்ணம் இடித்து சுற்றி நின்று
கொள்ளிதடி பிடித்து
எரிகின்ற நெருப்பிடையே
அசைகின்ற உன் உடல் பார்த்து
தேம்பி அழுது தெருவுக்கு
உன் பாடை எழுகின்ற போது;
ஓங்கி குரலுயர்த்தி
ஐயோ! என் செல்லத்தை எரிக்க வேண்டாம் என
பாடை பிடித்திழுத்து சுற்றம் மயங்கிச் சரிய……
கொள்ளிதடி பிடித்து
எரிகின்ற நெருப்பிடையே
அசைகின்ற உன் உடல் பார்த்து
தேம்பி அழுது தெருவுக்கு
உன் பாடை எழுகின்ற போது;
ஓங்கி குரலுயர்த்தி
ஐயோ! என் செல்லத்தை எரிக்க வேண்டாம் என
பாடை பிடித்திழுத்து சுற்றம் மயங்கிச் சரிய……
மயானம் ஏகும் உன் உடல்
இல்லையடா உனக்கு இறுதி கிரியையும்
தோழனே உனக்கு இல்லை
அதற்கும் ஆணை வழங்கவில்லை நீதிமன்றம்
ஏனெனில்,
உன் இறப்புக்கு பின்னால்
ஓர் பிறப்பு உண்டு என்பதை
அதிகார பீடம் நன்கறியும் நண்பனே
தோழனே உனக்கு இல்லை
அதற்கும் ஆணை வழங்கவில்லை நீதிமன்றம்
ஏனெனில்,
உன் இறப்புக்கு பின்னால்
ஓர் பிறப்பு உண்டு என்பதை
அதிகார பீடம் நன்கறியும் நண்பனே
என் போராளித் தோழனே!
நீ இறந்தாய்
ஆனால்
நீ சுமந்த நெருப்பின் வேர்களை
ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம்
உள்ளங்களில் ஊன்றி விட்டுச் செல்கிறாய்
நீ இறந்தாய்
ஆனால்
நீ சுமந்த நெருப்பின் வேர்களை
ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம்
உள்ளங்களில் ஊன்றி விட்டுச் செல்கிறாய்
போய் வா என் தோழனே போய் வா
(நன்றி - ஈழபாரதி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக