தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின் நபர்களில் ஒருவராக விளங்கிய இனியபாரதி தமிழினத்தை காட்டிக்கொடுத்து கருணா இனத்துரோகமிழைத்து பிரிந்து சென்றபோது கம்பிநீட்டியிருந்தான்.
மட்டு-அம்பாறை பகுதியில் தமிழகத்து பாணியில் கட்டைப் பஞ்சாயத்து முறையில் அடாவடித்தனம் செய்து வரும் இனியபாரதியை சிங்களப் பெண் ஒருவர் திருமணம் முடித்து சொத்துகளை சேர்த்துக் கொண்டு பிரிந்து போயிருந்த நிலையில் அண்மையில் பள்ளிக்கூட மாணவி ஒருவரை பலவந்தமாக கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அம்பாறையில் குறித்த ஒரு கோவிலுக்கு பஜரோ வாகனத்தில் இனியபாரதி சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த கோயிலுக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டை இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கிளைமோர் தாக்குதலில் பஜரோ வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் அதில் வந்தவர்கள் கோயிலுக்கு முன்னதாக சென்றதால் உயிர்தப்பியுள்ளார்கள். இனியபாரதி வழக்கமாக கோயிலுக்கு வரும்போது பஜரோவை நிறுத்தும் இரண்டு இடங்களை நன்கு அவதானித்து அந்த இடங்களில் இரண்டு கிளைமோரை மறைத்து வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றே வெடித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக