பட்டொளிரும் சூரியனாய் மீண்டும் இவன் தோன்றுவான்
ஈகம் நிறை சாற்றிய எம் வீரர்கள் கூட்டினில்
சுட்டெரிக்கும் வீரியனாய் இவனே பாதை காட்டுவான்
57 அகவையிலும் குன்றாத இலட்சியங்கள் தாங்கும் இவன்
87 ஆகையிலும் மங்காத இலட்சணங்கள் பொங்கும் மகன்
அதர்மத்தை அடியறுக்க பெரும் தர்மத்தை நிலை நிறுத்த
பகைவர்கள் தலையறுத்து எம் கயவர்கள் கதை முடிப்பான்
இனி மேவும் கொடும் சுடும் நெருப்பாற்றின் வழிதன்னில்
தனி ஆகும் நாம் தேடும் பாடும் எம் தாய் நிலம்
தாயகம் காத்திட தாகங்கள் தீர்த்திட மௌனங்கள் களைந்து
மன்னவன் வரும் நாளில் நிச்சயம் மலரும் தமிழீழம்
- தேசியன் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக