11/27/2011

தாவிய வேங்கையின் உருவினில் சீறிய கார்த்திகை தீபங்களே
காவிய நாயகன் கருவினில் தோன்றிய கல்லறை தெய்வங்களே
உதிரம் சொரிந்து உயிரை எறிந்து உவகை செய்தீரே
சரிதம் பொழிந்து மலையாய் நிமிர்ந்து உவமை நெய்தீரே
அகிலம் எங்கும் உங்களின் வாசலில் இன்று கூடுகின்றோம்
தாய்நிலம் பொங்கும் கனவுகள் தங்கும் என்று பாடுகின்றோம்

 
றிகாலன் கொடும் நிலையை எப்போதும் வென்று முடித்தவரே
கரிகாலன் வாழும் கலையை இப்போதும் ஊன்றிச் சென்றவரே
விடுதலை உயிர்க்க படு களம் அதில் ஆண்டு நின்றவரே
வரும் பகை அழிக்க கொடு தளம் மீதில் வென்று சென்றவரே
எம் சந்ததி உள்ளார் பழிநிலை கொள்ளார் விரைவினில் எழுவார்
உம் சந்நிதி எல்லாம் இழிநிலை செய்தார் விண்ணினில் அழிவார்

ஈழம் ஈன்றளித்த இமயம் போன்றவன் தோன்றிடும் நேரம் இசையிது
காலம் வென்றளித்த சமயம் கற்றவன் வென்றிடும் தூரம் அசையிது
இனியும் எதிரியின் வீட்டிலிலுள் நெருப்பாறும் சிவப்பாறும் ஓடும்
கனியும் புதிய எம் நாட்டினிலுள் பாலாறும் தேனாறும் கூடும்
கல்லறை தங்கும் கலங்கிடும் விழியுடன் கண்மூடி உள்ளோரே நாளை
புல்லரை எங்கும் விலங்கிடும் மொழியுடன் மண்மடி கொள்வோமே


- தேசியன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக