8/11/2012

முள்ளிவாய்க்காலில் சிக்காத முகமூடிப் பிரிவினர்.



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், பல படையணிகளும் பிரிவுகளும் இருந்தது யாவராலும் அறியப்பட்ட விடையம். அறியப்படாத விடையம் ஒன்றை நாம் இங்கே பார்ப்போமா ?

இயக்கத்தில் உளவுப் பிரிவி, ஊடுருவும் படையணி, கண்ணிவெடிப் பிரிவு, மோட்டார் படையணி எனப் பல பிரிவுகளும் படையணிகளும் இருந்தது. புலிகள் படையணியில் ஒரு பிரிவு இருந்தது, அதனை முகமூடிப் பிரிவு என்று சொல்லுவார்கள். இப்படியொரு பிரிவு இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. புலிகளின் தலைவரின் நேரடி வழிகாட்டலில் இருந்த, இந்த முகமூடிப் பிரிவு தற்போது எங்கே ? இது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது !

விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பல திறமையான போராளிகளில், சிலரை மட்டும் தேர்ந்தெடுத்த தலைவர் 1997ம் ஆண்டு முகமூடிப் பிரிவு என்ற ஒரு பிரிவை உருவாக்கினார். இவர்களுக்கு பிரத்தியேகமாக பல அசைன்மன்டுகள்(வேலைத்திட்டங்கள்) வழங்கப்பட்டது. இப் பிரிவில் உள்ளவர்கள், போராட்டத்தில் அதிகம் பங்குகொள்ளவில்லை. ஆனால் ஆயுதங்களைப் பற்றி நன்கு அறிந்துவை வைத்திருந்திருக்கிறாகள். வேறு நாட்டு உளவாளிகள், மற்றும் உள்நாட்டில் உள்ள சிங்கள உளவாளிகளோடு எப்படிப் பழகுவது, எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை இவர்கள் பெற்றிருந்தனர். அத்தோடு மட்டுமல்லாது இவர்கள் காட்டில் பல காலம் வாழவும் ஆபத்து ஏற்படு சூழலில் தம்மை காப்பாற்றி, கிடைக்கும் பொருட்களை உணவாக்கி உண்டு மறைந்து வாழவும் சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டனர்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தொய்வு ஏற்படும் தருணத்தில், இல்லையேல் அவ்வியக்கம் பாரிய அழிவைச் சந்தித்தால் , அதன்பின்னர் மீண்டு எழ ஏதுவாக இப் பிரிவு செயல்படும் என்பதே தேசிய தலைவர் அவர்களின் திட்டமாக இருந்திருக்கிறது எனத் தற்போது அறியப்படுகிறது. தேசிய தலைவரோடு நின்று இப்பிரிவை உருவாக்கத் துணை நின்ற கலியுகன் என்னும் போராளி தற்போது பெயர் குறிப்பிடமுடியாத ஒரு நாட்டில் இருக்கிறார். அவர் அதிர்வு நிருபருக்கு அளித்தபேட்டியிலேயே மேற்கண்ட விடையங்களைத் தெரிவித்துள்ளார். இறுதியுத்தம் நடைபெறுவதற்கு முன்னதாகவே(பூநகரி வீழ்வதற்கு முன்னரே) முகமூடிப் பிரிவில் உள்ள பலர் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு அமைய வன்னிப் பரப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அத்தோடு தாம் முள்ளிவாய்க்காலில் நின்றவேளை இப் பிரிவின் உறுப்பினர்கள் எவரையும் பார்க்கவில்லை என கலியுகன் மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்!

நன்றி - அதிர்வு

8/09/2012

இனம் தெரியாத நபர்களால் சிங்களக் கைக்கூலிகள் மூவர் கொலை!


யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் சிங்களப் படைகளுடன் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.08.2012) இரவு இடம்பெற்ற இச்சம்பவங்களில் பலியான மூவரும் கிளிநொச்சி வட்டக்கச்சி, முல்லைத்தீவு விசுவமடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.



இவர்களில் வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த சிவராசா (45) என்பவர் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் வைத்து கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது உடலம், எரிந்து சாம்பராகிய நிலையில் காணப்பட்ட இவரது வீட்டிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

7/22/2012

வீரவணக்கம்


தமிழின விரோதி கிளைமோர்த் தாக்குதலில் தப்பினான்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின்  நபர்களில் ஒருவராக விளங்கிய இனியபாரதி தமிழினத்தை காட்டிக்கொடுத்து கருணா இனத்துரோகமிழைத்து பிரிந்து சென்றபோது கம்பிநீட்டியிருந்தான்.

மட்டு-அம்பாறை பகுதியில் தமிழகத்து பாணியில் கட்டைப் பஞ்சாயத்து முறையில் அடாவடித்தனம் செய்து வரும் இனியபாரதியை சிங்களப் பெண் ஒருவர் திருமணம் முடித்து சொத்துகளை சேர்த்துக் கொண்டு பிரிந்து போயிருந்த நிலையில் அண்மையில் பள்ளிக்கூட மாணவி ஒருவரை பலவந்தமாக கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அம்பாறையில் குறித்த ஒரு கோவிலுக்கு பஜரோ வாகனத்தில் இனியபாரதி சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த கோயிலுக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டை இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கிளைமோர் தாக்குதலில் பஜரோ வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் அதில் வந்தவர்கள் கோயிலுக்கு முன்னதாக சென்றதால் உயிர்தப்பியுள்ளார்கள். இனியபாரதி வழக்கமாக கோயிலுக்கு வரும்போது பஜரோவை நிறுத்தும் இரண்டு இடங்களை நன்கு அவதானித்து அந்த இடங்களில் இரண்டு கிளைமோரை மறைத்து வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றே வெடித்துள்ளது.


7/15/2012

22ம் ஆண்டு நினைவு நாள்


16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் புத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன்,  ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

16.07.1990 அன்று பலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரத்தளபதியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

7/08/2012

சகோரதச் சண்டையா ? துரோக மோதலா? - புலமைப்பித்தன்


people Liberation Organaisation of Tamil Elam- இதன் சுருக்கம்தான் ப்ளாட். விடுதலைப் புலிகள் இயக்கத்-திலிருந்து வெளியேற்றப்பட்ட உமா மகேஸ்வரன் தனியாகத்  தொடங்கிய இயக்கம், நான் உமாவுக்கும் அந்த இயக்கத்துக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்.
ஆனால் அத்தனையும் சாக்கடையில் கொட்டிய சர்க்கரையாகிப் போனது. உமா மகேஸ்வரன் இயக்கம் மட்டுமன்று; விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் விடுதலை இயக்கமாக இருக்கவில்லை.
எல்லாம் கெடுதலை இயக்கங்கள். ஒரு நாள் மாலை 5 மணி இருக்கும்... ஈழத்தில் காந்திய இயக்கம் வைத்து நடத்திய மரியாதைக்குரிய டேவிட் அய்யா அவர்களும், சந்திரஹாசனும் என்னை வந்து சந்தித்தார்கள்.
அவர்கள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டனர்.
‘அய்யா நீங்கள் உமாவை அழைத்து சந்ததியார் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார்? என்று கேளுங்கள்’ என்றார்கள். ‘ப்ளாட் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் உமாவுக்கு எதிராக, ஆனால் நியாயமாக கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் சந்ததியார். அதற்கான பதிலை முறைப்படி சொல்லாமல் சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக்கிறார் உமாமகேஸ்வரன். அதற்குப் பின்னால் சந்ததியாரைக் கொன்று எங்கோ புதைத்துவிட்டார்கள்’ என்று அவர்கள் மிகுந்த வேதனையோடு பின்னால் என்னிடம் தெரிவித்தார்கள்.

கப்டன் ஜிம்கலி


விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்குகப்பால்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை.
இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்.
வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன். ஜிம்கலி.

7/07/2012

நிமலரூபா உன் இறப்பு பின்னே ஓர் பிறப்புண்டு

ஓ என் தோழனே
நீ செய்த குற்றம் ஒன்றுதான்
காவலர்களின் சப்பாத்துக் கால்களை
நக்க மறுத்த உன் நெஞ்சில்
நூறாயிரம் முறை
ஓங்கி …ஓங்கி மிதித்தன
ஆதிக்கக் கால்கள்
உன் உடல் பிழிந்து
உயிரைத் தோண்டி எடுத்துத்
தெருவில் எறிந்தனர் அவர்கள்
நேற்று நீ இட்ட கூக்குரலில்
வளைந்த சிறைக் கம்பிகளின்
நிழல் விழுந்த நிலத்தில்
உறைந்து கிடக்கிறது உன் குருதி
சிறையின் இருளின் முடக்குகளில்
எங்கோ
அப்பிக் கிடக்கிறது
உன் உயிர்
இருள் வடிந்து விடிகின்ற ஓர் பொழுதில்
உயிர் மடிந்து வீழ்ந்தாய் என் நண்பனே
மரணித்தாய் என் தோழனே நீ மரணித்தாய்
அனுராதபுரத்தில்;
உன் உடனிருந்த நண்பனை சித்திரவதை செய்ததும்,
மனிதக் கழிவூற்றி மண்டியிடச் சொன்னதும்- உன்
காதை அடைந்ததும் கனன்றேழுந்தாய் – தோழருடன்
காவலர் மூவரைச் சிறைப் பிடித்தாய்
சிறையிலிருந்து கொண்டு
சிறை மீட்கப் போரிட்டாய்
ஆயிரம் சிலுவைகளை நீ சுமந்து கொண்டு
அவனை அறைந்து வைத்த
ஆணியை பிடுங்கக் கரங் கொடுத்தாய்
என் போராளித் தோழனே!
மூன்றாண்டு கால அமைதிக்குப் பின்னால்
அதிகாரத்தின் முகங்களை நோக்கிச்
சுட்டுவிரல் நீட்டிய வீரனே!
மயங்கிக் கிடந்த உன்னைப்
படுகொலை செய்தனர் வீரர்கள்
பிணத்தைத் தூக்கித்
தூக்கில் போட்டு கொக்கரித்தனர் அவர்கள்
தோழனே நீ மரணித்தாய்
உன் காயங்களைத் தொட்டுத் தடவி,
முத்தமிட்டு, பெரு மூச்செறிந்து
குருதி படிந்த உன் கேசம் கோதி
ஐயோ மகனே என்று ஆர்பரித்து
அழுது தேற உன் அம்மாவுக்கும்
அனுமதி மறுக்கப்பட்டதடா
சுண்ணம் இடித்து சுற்றி நின்று
கொள்ளிதடி பிடித்து
எரிகின்ற நெருப்பிடையே
அசைகின்ற உன் உடல் பார்த்து
தேம்பி அழுது தெருவுக்கு
உன் பாடை எழுகின்ற போது;
ஓங்கி குரலுயர்த்தி
ஐயோ! என் செல்லத்தை எரிக்க வேண்டாம் என
பாடை பிடித்திழுத்து சுற்றம் மயங்கிச் சரிய……
மயானம் ஏகும் உன் உடல்
இல்லையடா உனக்கு இறுதி கிரியையும்
தோழனே உனக்கு இல்லை
அதற்கும் ஆணை வழங்கவில்லை நீதிமன்றம்
ஏனெனில்,
உன் இறப்புக்கு பின்னால்
ஓர் பிறப்பு உண்டு என்பதை
அதிகார பீடம் நன்கறியும் நண்பனே
என் போராளித் தோழனே!
நீ இறந்தாய்
ஆனால்
நீ சுமந்த நெருப்பின் வேர்களை
ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம்
உள்ளங்களில் ஊன்றி விட்டுச் செல்கிறாய்
போய் வா என் தோழனே போய் வா
(நன்றி - ஈழபாரதி)

6/30/2012

கருணாநிதியின் கபட நாடகம்! – பழ. நெடுமாறன்!.

தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்" என தி.மு.. தலைவர் மு.கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். .தி.மு.. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்தின் முற்பகுதியில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் ஈழப்போராளிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கு தங்கியிருக்கவும் மக்களிடையே தங்கள் போராட்டத்தைக் குறித்துப் பிரசாரம் செய்யவும் நிதி திரட்டவும் தாராளமாக அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, ஆளுங்கட்சியின் தலைவராக விளங்கியபோதும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு கருணாநிதி துணை நின்றார் என்பதை நாம் பார்த்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் மிஞ்சும். ஆட்சியும், அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக்கூட அசைக்க அவர் தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி 30-4-73 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.